– நமது நிருபர்-
தலைமை தேர்தல் கமிஷனர் நானே குமாருக்கு எதிராக டில்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் தலைமையிலான இண்டி கூட்டணி எம்பிகள் போராட்டம் நடத்தினர்.
பண்டிகைக் காலத்தை ஒட்டி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்பட்ட பயணமாக வியட்நாமுக்கு ராகுல் சென்றுள்ளார். போராட்டத்துக்கு மத்தியில் ராகுல் வெளிநாட்டு பயணம் குறித்து பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது.
ராகுல் வெளிநாடு பயணம் குறித்து, திருவனந்தபுரத்தில் நிருபர்கள் கேள்விக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் அளித்த பதில்; நான் ஒரு டிராவல் ஏஜென்ட் கிடையாது. என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்பதில் அர்த்தமில்லை.
நான் ஏன் டில்லியில் இருந்து இப்போது இங்கு வந்தேன்? ஒவ்வொருவருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அதனால், அதுபற்றி என்னால் கருத்து கூற முடியாது,’ என்று சசி தரூர் கூறினார்.
