அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிய கட்ட விசாரணை நடத்த சபாநாயகர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் 30-ஆம் தேதி ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி தங்களது விளக்கங்களை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் 30 நிமிடங்கள்
விசாரணையின்போது, ராஜினாமா செய்த ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் தனித்தனியாக சுமார் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ராஜினாமா தன்னிச்சையாக வழங்கப்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளக்கம் அளிக்க வேண்டும்
விசாரணையில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள், தங்களது ராஜினாமா முடிவுக்கான காரணங்கள் மற்றும் அதுதொடர்பான தங்கள் தரப்பு விளக்கங்களை நேரடியாக சபாநாயகர் முன் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இபிஎஸுக்கும் புதிய கடிதம்
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ( இபிஎஸ் ) விளக்கம் அளிக்க புதிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக அனுப்பப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் விளக்கம் கோரி அதிகாரப்பூர்வ தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் ஏற்கனவே அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 30-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விசாரணை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு சபாநாயகர் எடுக்கும்முடிவுமற்றும் அதற்கு அதிமுக தரப்பின் பதில் ஆகியவை தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
அதிமுக -வின் நிலை என்ன?
அதிமுக தற்போது சுக்குநூறாக உடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ள அதிருப்தி காரணமாக பல நிர்வாகிகள் திமுக அதிமுக என பல நிர்வாகிகள் விலக தொடங்கினர்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் அதிமுக திமுக என்ற இரண்டு பிராந்திய திராவிட கட்சிகளுக்கு எதிரான மக்களின் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விஜய் அலை மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பன்னெடுங்காலமாக திராவிட அரசியலுக்கு மாற்றாக வைக்கப்பட்ட சித்தாந்தங்களுக்கு பலனாகவே இது கருதப்படுகிறது.
தவெக அடித்த Six ! இனி அரசியல் ஆட்டம் வேற மாறி!
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில்பிளவுஎன்பது அதற்கு என்பது மிக நீண்ட கால போராட்டமாக மாறி இருக்கிறது. எடப்பாடி தலைமையை ஏற்க முடியாமல் கட்சிக்குள் நிலவும் சச்சரவு பூதாகரமாக வெளித்த நிலையில் எடப்பாடியும் தனக்கு எதிராக செயல்படுபவர்களையும் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்படுபவர்களின் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இந்த நீக்கல்தான் அதிமுக -வின் இன்றைய இந்த நிலைக்கு காரணம் என்கின்றனர் விமர்சகர்கள்.
Source link
