ராமதாசின் ஆலோசனைகள் தொடரும்: பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு

சென்னை: ராமதாஸின் ஆலோசனைகள் தொடரும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

‛பா.ம.க.,வில் எந்த குழப்பமும் இல்லை. பா.ம.க., வேகமாக வளர்ந்து வருகிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு 88 வயதாகி விட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், நன்றாகவே இருக்கிறார்.

ராமதாஸ் அறிவிப்பு என்பது, அவருடைய முடிவுதான். அரசியலில் ஓய்வு என யாருக்கும் இருக்காது. பா.ம.க.,விற்கு அவருடைய ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் தொடரும்.

நல்ல எதிர்க்கட்சியாக பா.ம.க., செயல்பட்டு வருகிறது. நாங்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்.

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் கனிமவள கொள்ளை தொடர்கிறது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.குவாரிகளை முறைபடுத்தினால் தமிழக அரசுக்கு 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்

Source link