ரஹ்மானை போலவே ஹான்ஸ் சிம்மரும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவருக்கும் ரஹ்மானுக்கும் நெருங்கிய நட்பு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. நியூயார்க் நகரில் உள்ள சிம்மரின் பிரம்மாண்ட மியூசிக் ஸ்டுடியோவில் தான் , ரஹ்மானின் ஸ்டுடியோவும் இருக்கிறது. ஒரு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஏஆர். ரஹ்மானின் இசையை, தனது குழுவினருடன் சிம்மர் வாசித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராமாயணம் திரைப்படத்தின் மகத்துவத்தை கருதி, அதை இசையின் தரம் சர்வதேச அளவில் இருக்க வேண்டும் என்று , சிம்மருடன் பணிபுரிய ரஹ்மான் சம்மதித்திருந்தார்.
ராமாயணம் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான் , “ராமாயணம் திரைப்படத்தில் பணியாற்றியது கற்றலுக்கான ஒரு பயணமாகும். ராமாயணம் ஒருவர் பெற்றோரிடம், மனைவியுடன், குழந்தைகளிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது. இது அறநெறிகளை கற்பிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றியது , இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது . நிதேஷ், யாஷ், ரன்பீர், சாய் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி”. நான் உங்களிடம் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன்.
