ரிலீஸான அன்றே தியேட்டரில் ஜனநாயகன் படம் பார்த்தாரா விஜய் மனைவி சங்கீதா?: உண்மை என்ன தெரியுமா? – know the truth about cm vijay wife sangeetha watching jananayagan movie in theatre

சங்கீதா வந்தாரா?: ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் ஜோசப் விஜய் முதல் முறையாக நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி ரிலீஸானது. பாபி தியோல் வில்லனாக நடித்த அந்த படம் ரிலீஸான அன்று இந்தியாவில் ரூ. 41 கோடி வசூல் செய்தது. ஜனநாயகன் படம் திரைக்கு வந்த அன்றே சங்கீதா சொர்ணலிங்கம் தியேட்டருக்கு வந்து பார்த்தார் என்று கூறி விஜய் ரசிகர்கள் வீடியோ ஒன்றை ஷேர் செய்தார்கள்.

விஜய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறி விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில் சங்கீதா எப்படி ஜனநாயகன் படத்தை பார்க்க வந்தார்?. அப்படி என்றால் விஜய், சங்கீதா விவாகரத்து ரத்தாகிவிட்டதா என்று சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள். மாஸ்க் அணிந்து முகம் தெரியாதபடி காரில் இருந்து சங்கீதா இறங்கிய வீடியோவால் குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் அந்த வீடியோ போலி என்பது தெரிய வந்திருக்கிறது. ஜனநாயகன் பார்க்க சங்கீதா வந்ததை அவர் தரப்பிலோ, விஜய் தரப்பிலோ உறுதி செய்யவில்லை. அவரின் பழைய வீடியோவை ஜனநாயகன் பின்னணியில் எடிட் செய்து லேட்டஸ்டாக எடுத்தது போன்று சொல்லி ஷேர் செய்திருக்கிறார்கள்.

விஜய்க்கும் போலி வீடியோ: இது போன்று போலி வீடியோக்கள் வெளியாவது அதிகரித்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்று அங்கு கல்விக்காக போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் விஜய் என ஒரு வீடியோ வெளியானது. விஜய் எப்பொழுது டெல்லி சென்றார், கரப்பான்பூச்சி ஆட்களுக்கு எப்பொழுது ஆதரவு தெரிவித்தார் என்று மக்கள் வியந்தார்கள். இந்நிலையில் அந்த வீடியோவை டெல்லி போலீசார் பார்த்துவிட்டு இது போலி வீடியோ, யாரும் நம்ப வேண்டாம் என்றார்கள். விஜய்யின் பழைய வீடியோவை எடுத்து அதை ஜந்தர் மந்தரில் எடுத்தது போன்று பொய் தகவலை பரப்பியிருக்கிறார்கள்.

தற்போது எல்லாம் ஒரு வீடியோ வந்தால் அது எடிட் செய்யப்பட்டதா, ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்கிற சந்தேகம் தான் வருகிறது. போலி வீடியோக்களின் காலமாகிவிட்டது என்று சினிமா ரசிகர்கள் கூறுகிறார்கள். விஜய், சங்கீதாவின் விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் சங்கீதாவின் போலி வீடியோ வெளியானதால் ஒரு வேளை இருவரும் சேர்ந்துவிட்டார்கள் போன்று என பேச்சு கிளம்பியது.
ஜனநாயகன் 3வது நாள் வசூல்: இதற்கிடையே வெள்ளிக்கிழமை குறைந்த ஜனநாயகன் படத்தின் வசூல் சனிக்கிழமை சற்று அதிகரித்தது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 24ம் தேதி இந்தியாவில் ரூ 21.15 கோடி வசூல் செய்தது. நேற்றோ ரூ. 28.50 கோடி வசூலித்தது. ரிலீஸான மூன்றே நாட்களில் இந்தியாவில் ரூ. 92.35 கோடி வசூல் செய்துள்ளது விஜய்யின் கடைசி படம். உலக அளவில் மூன்று நாட்களில் ரூ. 171. 84 கோடி வசூல் செய்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

ஜனநாயகன் படம் ரிலீஸுக்கு முன்பு அதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு ஆன்லைனில் லீக்கானது. இந்நிலையில் தற்போது ரிலீஸான அன்று மீண்டும் லீக்காகிவிட்டது. நடிகர் விஜய் தான் தற்போது முதல்வராக இருப்பதால் புதுப்படங்களை உடனுக்குடன் ஆன்லைனில் லீக் செய்யும் ஆட்களை பிடித்து நடவடிக்கை எடுப்பார் என்று சினிமா ரசிகர்கள் நம்புகிறார்கள்.
Source link