ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் சர்மா: 3வது போட்டியிலும் நியூசிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா

Summary

அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்து, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற வைத்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இந்திய அணி வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இந்தியா

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் மீண்டும் இடம்பிடித்தார்.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டிம் செபர்ட் 2 ரன்னும், அதிரடியாக ஆடிய பின் ஆலன் 40 ரன்னும் எடுத்து வெளியேறினர். கிளென் பிலிப்ஸ் 17 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு பின் ஆலன் – டேரில் மிட்செல் ஜோடி 86 ரன்கள் குவித்தது.

மிட்செல் அரை சதம்

4வது விக்கெட்டுக்கு டேரில் மின்செல், பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 48 பந்தில் 75 ரன்கள் குவித்தது.

இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்துள்ளது. டேரில் மிட்செல் 52 பந்தில் 89 ரன் குவித்தார். பொறுப்புடன் ஆடிய பெவன் ஜேக்கப்ஸ் 23 பந்தில் 39 ரன் எடுத்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், நிதிஷ்குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, அபிஷேக் சர்மா கிடைத்த பந்துகளை சிக்சர், பவுனட்ரிகளாக விளாசினார். அவர் 15 பந்தில் அரை சதம் கடந்தார்.

பவர்பிளேயில் இந்தியா 118/0

பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் குவித்தது.

முதல் விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யவன்ஷி 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 45 ரன் எடுத்து அவுட்டானார்.

அபிஷேக் சர்மா அதிரடி சதம்

தொடர்ந்து அதிரடியை விடாத அபிஷேக் சர்மா 35 பந்தில் சதமடித்து அசத்தினார்.

2வது விக்கெட்டுக்கு 17 பந்தில் 45 ரன் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 38 பந்தில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 13.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றி அசத்தியது.

Source link