சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக கூட்டுறவுத்துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குறைந்த விலையில் மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இந்தத் திட்டம் நாளை துவக்கி வைக்கப்பட இருக்கிறது.
10 மளிகைப் பொருட்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு ரூ.200க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, தனியா,மிளகாய், புளி, கடுகு, சோம்பு, சீரகம், பூண்டு உள்ளிட்ட 10 பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.
கூட்டுறவு அங்காடிகளில் இந்த மளிகை தொகுப்புகளை மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
