ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 15 நாளில் முழு அனுமதி தர அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் முயற்சியாக, 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அனைத்து அனுமதிகளையும், 15 நாட்களுக்குள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

நிறுவனங்களின் அனைத்து அனுமதிகளும் ஒரே தளத்தின் வாயிலாக விரைவாக பெற்று தரும் ஒற்றைச்சாளர இணையதளமும் உள்ளது. அதில் விண்ணப்பம் செய்தாலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் அனுமதிகளை பெற மாதக்கணக்கில் தாமதமாகிறது.

இதனால், முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்து முதலீடு செய்ய தயக்கம் காட்டி னர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க புகார் எண் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, அனைத்து அனுமதிகளையும், 15 நாட்களுக்குள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளை கண்காணிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட் ட குழுவும் அமைக்கப்பட உள்ளது.

* முதலீடுகளை கண்காணிக்க உயர்நிலை குழு அமைக்கப்படும்.

* ஒப்பந்தம் செய்த நிறுவனம் தொழில் தொடங்குவதை இக்குழு கண்காணிக்கும்.

* மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்.

Source link