ரூ.3,030 கோடியில் 3 ரசாயன பூங்கா : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி:பவ்யா ரசாயன் எனும் திட்டத்தின் கீழ் நாட்டில் மூன்று பிரத்யேக ரசாயன தொழில்பூங்காக்களை 3,030 கோடி ரூபாய் செலவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றஅமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், நடப்பு நிதியாண்டு முதல் 2030-31 வரை செயல்படும். இதில் ரசாயன பூங்காக்களில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பொது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த3,000 கோடி ரூபாயும் நிர்வாக செலவுகளுக்காக 30 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில்களுக்கு அடிப்படை மூலப்பொருட்களை வழங்கும் முக்கிய துறையாக ரசாயன துறை இருப்பதால், இந்த திட்டம் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை முற்றிலும் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கம் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link