நமது நிருபர்
தமிழக – கேரள எல்லையில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், எஸ்.எஸ்.ஐ.,க்கள் கணேசன், அய்யப்பன் உட்பட 7 போலீசார் சிக்கிய நிலையில், தேனி எஸ்.பி., பிரவீன் கவுதம் அவர்களை சஸ்பெண்ட் செய்தார்.
தமிழக, கேரளா எல்லையான தேனி மாவட்டத்தில், போடி மெட்டு, முந்தல், குமுளியில் போலீஸ் சோதனை சாவடிகள் உள்ளன. இவ்வழியாக கனிமங்கள், கால்நடைகளுடன் செல்லும் வாகனங்களை போலீசார் சோதனை செய்யாமல் பணம் வசூலித்து அனுப்புவதாக புகார்கள் எழுந்தன.
ஜூலை 10ல் தேனி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கணக்கில் வராத, 35,000 ரூபாய் சிக்கியது.
இந்த லஞ்ச புகாரில் சிக்கிய முந்தல் எஸ்.எஸ்.ஐ., கணேசன், குமுளி எஸ்.எஸ்.ஐ., அய்யப்பன், ஏட்டுக்கள் உமாநாத், பாஸ்கர், அருள் ஆனந்தம், ராஜேஷ் கண்ணன், பாலமுருகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., பிரவீன் கவுதம் உத்தரவிட்டுள்ளார்.
