லண்டன் பயணம் முடிந்தது: சென்னை திரும்பினார் ஸ்டாலின்

சென்னை: லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

ஸ்டாலின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மகனுமான இன்பநிதி பட்டமளிப்பு விழாவுக்கு குடும்பத்துடன் திமுக தலைவர்கள் லண்டன் சென்றிருந்தனர். ஜூலை 3ம் தேதி ஸ்டாலின் குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்ட நிலையில், பட்டமளிப்பு விழா முடிந்த பின்னர் அங்கேயே சில நாட்கள் ஓய்வு எடுத்தார்.

லண்டன் பயணம் முடிந்து, இன்று (ஜூலை 19) அதிகாலை ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்னை திரும்புவதாக இருந்தது. அவரை வரவேற்க ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

ஆனால், லண்டனில் இருந்து ஸ்டாலின் வரவிருந்த விமானத்தின் புறப்பாடில் தாமதம் நிலவியது. இதனால் அவரின் சென்னை வருகையில் மாற்றம் ஏற்பட்டது.

இந் நிலையில், இன்று இரவு 9 மணி அளவில் ஸ்டாலின் தமது குடும்பத்தினருடன் சென்னை வந்தார். அவரை திமுக தொண்டர்கள் புத்தகங்கள், சால்வைகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

Source link