லாரி மீது கார் மோதி விபத்து சென்னையை சேர்ந்த மூவர் பலி

விக்கிரவாண்டி: சென்னை, சேலையூரை சேர்ந்த அருள்தாஸ் மனைவி தங்கபாய், 60. இவரது மகன் ஜான்பிரைட், 33. மகள் லதா கிறிஸ்டி, 30. மருமகன் ராஜ்குமார், 31. இவரது மகள்கள் ஜெசிஹெனா, 10, இவாஞ்ஜலின், 6.

இவர்கள், ஆறு பேரும் துாத்துக்குடியில் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டினார். நேற்று அதிகாலை, 12:45 மணியளவில் கார், விக்கிரவாண்டி அடுத்த, வி.சாலை அருகே வந்தபோது, முன்னாள் சென்ற மீன்பாடி லாரி மீது மோதியது.

இதில், காரில் பயணித்த தங்கபாய், ஜான்பிரைட், இவாஞ்ஜலின் ஆகியோர் உயிரிழந்தனர். ராஜ்குமார், லதா கிறிஸ்டி, ஜெசிஹெனா ஆகியோர் காயமடைந்தனர்.

l புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ், 42. இவரது மனைவி குணாவதி, 32. தம்பதி மகன் கீர்த்தன் குருபரன், 8. நான்காம் வகுப்பு மாணவர். நேற்று கீர்த்தன் குருபரனை, புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் சாலையில், ‘ஸ்கேட்டிங்’ பயிற்சிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

பயிற்சி முடிந்து இரும்பை அருகே, ஸ்கூட்டியில் வந்தபோது, கார் மோதியதில் குணாவதி பலியானார். தமிழ், கீர்த்தன் குருபரன் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

l திண்டுக்கல் மாவட்டம், கோட்டையூரை சேர்ந்த செந்தில்வேல், 55, அவரது மனைவி மதிவதனி, 45, ஆகியோர், சொகுசு கார் மோதியதில் பலியாகினர். காயமடைந்த அவரது மகள் ஹரிணி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source link