தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில், இன்று முதல் 10 நாட்கள் போர் நிறுத்தத்தைத் தொடங்க இந்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 34 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்விரு நாடுகளும் வாஷிங்டன் டி.சி.யில் எங்களது சிறந்த வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தன.
நிரந்தர அமைதியை எட்டுவதற்காக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுடன் இணைந்து செயல்பட எங்களது துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், செயலாளர் ரூபியோ மற்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி டான் ரேசின் கெய்ன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன். உலகம் முழுவதும் 9 போர்களைத் தீர்த்து வைத்தது எனக்குக் கிடைத்த கௌரவம்; இது நான் நிறுத்திய 10-வது போராக அமையும். எனவே, இதைச் செய்து முடிப்போம்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
