வங்கியில் பணம் வைத்திருப்போர் கவனத்திற்கு..! ரூ.5,000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது! RBI உத்தரவு.!

ஆனால், வங்கியின் நிதிநிலையில் சிக்கல் ஏற்படும்போது, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக, வங்கியில் அதிகத் தொகையைச் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற அறிவிப்புகள் கவலையை ஏற்படுத்தக்கூடும்.

பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்கள் பணம் எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்றும், அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு வங்கியின் நிதிநிலை மோசமடையும் போது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்த வங்கியின் மீது ‘மொரட்டோரியம்’ (Moratorium) எனப்படும் தடையை விதித்து, வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வரம்புகளை (Withdrawal Limits) நிர்ணயிக்க முடியும்.

வங்கியின் நிதி நிலைமை மோசமாக இருந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே (உதாரணமாக ரூ.10,000, ரூ.25,000 அல்லது ரூ.50,000) எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதிக்கும். (கடந்த காலங்களில் Yes Bank, PMC Bank, Lakshmi Vilas Bank போன்ற வங்கிகளில் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன).

Source link