பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள லூலா டாசில்வாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்க நாடான பிரேசிலில், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் லூலா பின் தங்கியிருந்தாலும், அக்டோபர் 26 ஆம் நாள் நடைபெற்ற இரண்டாம் சுற்றுத்தேர்தலில் மீண்டு வந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில், வலதுசாரி வேட்பாளரான ஃபிளாவியோ பொல்சனாரோ தோல்வியுற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றிபெற்றுள்ளார். இவர் 4 முறையாக பிரேசிலின் அதிபராகப் பொறுப்பேற்கிறார். இந்நிலையில், இவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் லூலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து பதிவில், ”அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நண்பர் லூலாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இந்தியா மற்றும் பிரேசிலின் கூட்டாண்மையை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். நாம் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
