வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி

இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர். இது தொடர்பாக ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் சோமாயே ரஃபீ, ‘‘போக்குவரத்து, எரிசக்தி, உணவுப் பாதுகாப்புக்கான ஒரு பாதுகாப்பான பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி பயன்படுத்தப்பட வேண்டுமானால், ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தும் ஒரு திட்டத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்னெடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி:

கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93.26 என வீழ்ச்சி கண்டது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி நிலவியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 2,496.89 புள்ளிகள் சரிந்து 74,207.24-ல் நிலைகொண்டது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 775.65 புள்ளிகள் சரிந்து 23,002.15 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, பெட்ரோல் – டீசல் விலையும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Source link