வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் குடியுரிமை பறிபோனதாக அர்த்தம் இல்லை; உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்படுவதற்கும், அவரது குடியுரிமைக்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் 3ம் கட்டமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், எஸ்ஐஆர் மூலம் வாக்காளர்கள் பெரிய அளவில் நீக்கப்பட்டு வருகின்றனர், தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கிட்டத்தட்ட 33 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

எஸ்ஐஆர் பணியின் போது சந்தேக வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. அவர்களுக்கு அரசின் சமூகநலத்திட்ட பலன்கள் மறுக்கப்படுகிறது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறி உள்ளதாவது;

ஒருவரின் குடியுரிமை சந்தேகத்துக்கு உரியதாக இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து அவரின் பெயரை நீக்க தேர்தல் கமிஷனுக்கு அரசிலமைப்பு அதிகாரம் உள்ளது. ஆனால், அவர் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை தேர்தல் கமிஷனால் தீர்மானிக்க முடியாது.

பீஹார், மே. வங்கம் எஸ்ஐஆர் தொடர்பான வழக்குகளின் போது, ஒருவரின் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு நீதிமன்றம் கூறி உள்ளது.

Source link