வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் விலை கம்மி; இந்தியர்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கும் குட்டி நாடு: ஆனா ஈரான் இல்ல

பெட்ரோலை மிகவும் மலிவாக கொடுக்கும் நாடு என்றால் நமக்கு முதலில் ஈரான் தான் நினைவிற்கு வரும். ஏனென்றால் ஈரானில் கச்சா எண்ணெய் மிகவும் அதிக அளவில் கிடைப்பதால் அங்கு பெட்ரோல் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், ஈரானை தவிர்த்து மற்றொரு நாடும் குடிநீர் விலையை விட குறைவான விலைக்கு பெட்ரோலை விற்று வருகிறது.

அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்: ஒரே ராத்திரியில் ரூ.13 கோடிக்கு அதிபதியான இந்தியர்; அடுத்த பிளான் இதுதான்

அதாவது,  தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள சிறிய ஆனால் விவரிக்க முடியாத அளவுக்கு பணக்கார நாடான புரூனை, அங்குள்ள மிகக் குறைந்த எரிபொருள் விலையால் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அங்கு சமையல் எண்ணெய் மற்றும் குடிநீர் பாட்டிலை விட பெட்ரோல் விலை மிகவும் மலிவாக உள்ளது.

அங்கிதா குமார் என்ற டிராவல் கன்டென்ட் கிரியேட்டர் தனது புரூனைப் பயண அனுபவங்களை சமூக வலைதளத்தில் வீடியோவாக பகிர்ந்து கொண்டுள்ளார். எண்ணெய் வளம் மிக்க பொருளாதாரம், பிரம்மாண்டமான மசூதிகள் மற்றும் அடர்ந்த மழைக்காடுகளுக்குப் பெயர் பெற்ற இந்த நாட்டிற்குச் செல்ல இந்தியர்களுக்கு 3 நாட்கள் வரை விசா தேவையில்லை என்ற தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.

உலகின் மிக அமைதியான நாடு

உலக அளவில் மிக குறைவான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடுகளில் புரூனையும் ஒன்று. உலகமே எரிபொருள் விலை உயர்வால் தவிக்கும் போது, இங்கு தண்ணீரை விட பெட்ரோல் மலிவாக விற்கப்படுகிறது.  மேலும், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புரூனையில் மக்கள் எவ்வித வரிகளும் செலுத்தத் தேவையில்லை. கல்வி சேவை முற்றிலும் இலவசம்; அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் வெறும் 1 டாலர் (சுமார் ரூ.85) மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்தமே இல்லாத விசித்திர உலகம்

தன் பயணித்ததிலேயே மிகவும் அமைதியான நாடு இதுதான் என்று வியக்கும் அவர், அங்குள்ள மிகவும் பரபரப்பான சாலை சந்திப்புகளில் கூட ஆள் நடமாட்டமே இருக்காது என கூறியுள்ளார். நாட்டின் 70 சதவீத பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு இரவு நேர கேளிக்கைகளோ அல்லது மதுபான கடைகளோ கிடையாது. உள்ளூர் மக்களுக்கு மது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

“இங்குப் பரபரப்போ, அவசரமோ அல்லது கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களின் நீண்ட பட்டியலோ இல்லை. வாழ்க்கை இங்கு மிகவும் வித்தியாசமான வேகத்தில் இயங்குகிறது. இந்தியர்கள் 3 நாட்களில் இந்த முழு நாட்டையும் சுற்றிப் பார்த்துவிடலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து நேரடியாக விமான சேவை

சென்னையிலிருந்து புரூனைக்குச் செல்ல நேரடி விமான வசதி உள்ளது. ‘ராயல் புரூனை ஏர்லைன்ஸ்’  நிறுவனம் இயக்கும் இந்த விமானத்தில் வெறும் 5 மணி நேரத்தில் புரூனையை அடையலாம். இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலிருந்து செல்பவர்கள் சிப்பகூர் ஏர்லைன்ஸ், ஏர்ஏசியா அல்லது மலேசியா ஏர்லைன்ஸ் மூலம் பயணிக்கலாம். ஒரு வழிப் பயணத்திற்கான விமானக் கட்டணம் பருவகாலத்தைப் பொறுத்து தோராயமாக ரூ.17,000 முதல் ரூ.21,000 வரை இருக்கும்.



Source link