வானிலை மாறுது.. நீலகிரியில் செப்.15, 16ல் மழை! தமிழகத்தில் இன்று வெதர் எப்படி இருக்கும்? – weather alert changes ahead nilgiris may get rain on sept 15 and 16

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளிலும் மழைக்கான வாய்ப்பு தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

செப்.15, 16ல் மழைக்கு வாய்ப்பு

செப்டம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளிலும் நீலகிரியில் சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, செப்டம்பர் 15ஆம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை

தமிழகத்தில் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காததால் விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது முக்கியமாக உள்ளது.

இதனால், வரும் நாட்களில் பெய்யும் மழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழை பெய்தால் சாகுபடிக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி தமிழகத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நாட்களிலும் மழை தொடரும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பும், நீலகிரியில் தொடர்ந்து மழைக்கான வாய்ப்பும் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

Source link