வாரிசுகளின் பேச்சை கேட்டு கண்கலங்கிய முகேஷ் அம்பானி

மும்பை:

ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

இதை கொண்டாடும் விழா மும்பையில் நடந்தது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் குழந்தைகளான ஆனந்த் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகியோர் பேசினர்.

ஆனந்த் அம்பானி பேசும்போது அவரது குடும்பத்தினரின் பெருமைகளை பற்றி குறிப்பிட்டார். அவரது தாத்தா திருபாய் அம்பானி, பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியை துவக்கியது முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தை கட்டமைத்தது வரை எடுத்துக்கூறினார்.

இதன் பின், இந்தியாவை சர்வதேச அளவில் தலைவராக மாற்றுவதற்காக தனது தந்தை முகேஷ் அம்பானியின் கொள்கைகள் குறித்து விளக்கினார். குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான அவரது முயற்சியை எடுத்துக்கூறினார்.

இதனை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து முகேஷ் அம்பானி, இவரது மனைவி நீடா கேட்டனர்.

ஒரு கட்டத்தில் தனது வாரிசுகள் பேசியதை கேட்டு உணர்ச்சி வசப்பட்ட முகேஷ் அம்பானி கண்கலங்கினார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

Source link