வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!

-நமது நிருபர்-

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (அக்டோபர் 24) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 13,070 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது; வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 220 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய நிலவரம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை; வார துவக்க நாளான இன்று (அக்டோபர் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 13,085 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 220 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link