வாவ்.. ஒரே நேரத்தில் 10 புதிய பைக்குகள்: வாகன சந்தையை அதிர வைத்த ஹோண்டா!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய 10 பைக்குகளில் 1 மின்சார வாகனமும் அடங்கும். பெட்ரோலில் இயங்கும் பைக்குகளுக்கு மத்தியில், மின்சார வாகனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஹோண்டா.

ஹோண்டா அறிமுகப்படுத்திய 10 புதிய பைக்குகளில் 7 புதிய மாடல்களும், 3 அப்டேட் செய்யப்பட்ட மாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் சாகசப் பயண மற்றும் பிரீமியம் பைக்குகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய மாடல்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது ஹோண்டா நிறுவனம்.

7 புதிய மாடல் பைக்குகளின் விவரங்கள்:

*அட்வென்ச்சர் பைக் பிரியர்களுக்கு – Honda ADV 160 மற்றும் Honda CB 500

* ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு – Honda XR 300L மற்றும் Honda XR 300 Rally

* தொலைதூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு – Honda Rebel 300 மற்றும் Honda Rebel 500 க்ரூயிசர் பைக்குகள்

* மின்சார வாகனப் பிரிவில் QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ​

3 அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள்:

சந்தையில் ஏற்கனவே வெற்றிகரமாக வலம் வரும் Honda CB 350 Range சீரிஸ் பைக்குகளுக்கு கவர்ச்சியான புதிய நிறங்கள் மற்றும் நவீன மயமான கிராபிக்ஸ் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளன. ​​

ஹோண்டாவின் 10 புதிய பைக்குகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ‘Make-in-India’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

Source link