விஜயதசமி நாளில் புத்தர் விகாரில் கூட்டு பிரார்த்தனை!

காட்டுமன்னார்கோவில் அருகே விளத்தூர் திருப்பணியாபுரத்தில் அமைந்துள்ள மகா போதி புத்தர் விகாரில், அசோக மன்னன் பௌத்த மதத்தை தழுவியதையும், சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்தம் தழுவி 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அந்த நாளை நினைவுகூரும் வகையிலும் விஜயதசமி அன்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

புத்தர் விகார் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நந்தனார் கல்விக் கழகத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம், காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, புத்தர் விகார் நிறுவனர் பழனிவேல்ராஜா, இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் அரவிந்த் மணிரத்தினம், ஆதிதிராவிடர் உறவின்முறை அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் ஆறு. அன்பரசன், பௌத்த உபாசகர் ஆசிய ஜோதி, ராஜலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அசோக மன்னன் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் பௌத்த மத மாற்ற வரலாற்றை நினைவுகூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் சிதம்பரத்தில் அம்பேத்கரிய பௌத்தம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.