சென்னை: வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
நடிகர்
விஜய் தனது நடிப்பில் வெளியான ‘புலி’ பட வருமானத்தில் ரூ. 15 கோடியை
கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை புகார் கூறியிருந்தது. இவ்வாறு வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக, வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து விஜய்
தொடர்ந்த வழக்கில், இன்று (பிப்ரவரி 06) காலை 10:30 மணிக்கு சென்னை ஐகோர்ட்
தீர்ப்பு அளித்தது. விஜய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த
ஐகோர்ட், விஜய்க்கு வருமான வரித்துறை 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது செல்லும் என
தீர்ப்பு அளித்தது.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு இந்த தீர்ப்பு
பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
