முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி தனது சமூக வலைதள பக்கத்தில், “திரு விஜய் அரசின் செயல்பாட்டைப் பாராட்டியதற்காக எனக்கு வாய்க்கு வந்தபடி பதில் சொன்னவர்களை பிளாக் செய்துவிட்டேன்.மரியாதை இல்லாமல் நான் பிறந்த வகுப்பைச் சொல்லித் திட்டியவர்களையும் பிளாக் செய்திருக்கிறேன். இப்படிப்பட்டவருடைய நடத்தை அவர்கள் சேர்ந்த கட்சியைத் தான் களங்கப்படுத்துகிறது.
திரு. மு.க ஸ்டாலின் அவர்களே, ஓர் இந்தியப் பிரஜை என்ற முறையில் என் கருத்துகளைப் பதிவிடுகிறேன். உங்களைப் போல் எனக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி நாராசமாக பதில் தருவதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பணத்தையும் பதவியையும் தாண்டிப் பண்பாடு முக்கியம் என்பதை வெளிப்படையாக யாரும் மறுக்கமுடியாது.” என்று கூறியுள்ளார்.
