விஜய் ஆட்சி முதல் பண மழை வரை: 8 மாதங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகுது – ரிக்கி ரத்தன் சொன்ன சீக்ரெட் – from vijay rule to wealth and prosperity ricky rattan pandit reveals what lies ahead

தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட் பேச்சைக் கேட்பதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. ஜெயலலிதா உள்ளிட்ட பல முக்கிய முன்னாள் தலைவர்களுக்கும் ஜோதிடராக விளங்கியவர். முதல்வர் விஜய்யின் அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, முதல்வர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வுக்கும் பின்னால் ரிக்கி ரத்தன் இருப்பதாகப் பேச்சுகள் எழுந்து வருகின்றன.

ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து தனது YouTube தளம் மூலம் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தகவல்களையும், தியானம் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்த தனது பார்வைகளையும் அவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், வரவிருக்கும் அடுத்த புத்தாண்டு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அவர் தனது YouTube பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார்.

திமுகவை தாக்கிப் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், பல ஆண்டுகளாக எனது ஜோதிடமும் ஆன்மீகமும் தெளிவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் வேண்டுமென்றே ஜோதிடத்தை எதிர்த்துப் பேசுவார்கள். அப்போதுதான் அவர்கள் தமிழகத்தில் வாக்கு வாங்கி வாழ முடியும். கடந்த 100 வருடமாக ஜோதிடத்தை எதிர்த்துப் பேசிய ஒரு கூட்டம் வாழ்கிறது என திமுகவையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் குறித்து அவர் விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

பெரும் பணக்காரராக வழி

ரிக்கி ரத்தன் பண்டிட் அவர் பணக்குவியல் நிறைந்த புகைப்படத்தைக் காண்பிக்க, இந்தக் குவியலை உங்கள் மனதில் எண்ணி தியானத்தில் பணத்தைப் பார்த்தீர்கள் என்றால், உண்மையான படமாக இது மாறிவிடும். இதுதான் மனித உளவியல். தியானத்தின் மூலமாகப் பெரும் பணக்காரராக வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விஜய்யின் வெற்றி குறித்து கருத்துs

ரிக்கி ரத்தன் பண்டிட் பேசுகையில் பேசுகையில், தமிழகத்தில் 2026-ல் முதல்வர் விஜய் ஜெயிப்பார் எனத் தினமும் 100 மெசேஜ் போட்டேன். எனது மேனிஃபெஸ்டேஷன்தான் அதை அளித்தது. பலரும் என்ன நம்பிக்கையில் இப்படி பேசுகிறீர்கள் எனக் கேட்டார்கள். ஆனால், நான் விஜய் ஜெயிப்பார் என்பதில் உறுதியாக இருந்தேன் என அவர் தெரிவித்தார்.

ஜோதிடக் கணிப்பு

ரிக்கி ரத்தன் பண்டிட்டின் ஜோதிடக் கணிப்பு பலிப்பதாகக் கூறி, நம் நாட்டின் பல தலைவர்களும் அரசியல் வியூக வகுப்பாளர்களும் அவரை அணுகி வருவதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் அவரது பேச்சு கவனம் பெற்று வருகிறது.

Source link