சென்னை: விஜய், திரிஷா இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதாலேயே, அவர்களை சுற்றி ஏதாவது ஒரு பேச்சு கிளம்பிவிடுகிறது. இருவரும் இணைந்து படங்களில் நடித்த காலத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கான கெமிஸ்ட்ரி பேசப்பட்டு வருகிறது. இப்போது விஜய் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், அவரையும் திரிஷாவையும் இணைத்து வெளியாகும் தகவல்கள் இன்னும் அதிக கவனத்தைப் பெறுகின்றன.
இந்த சூழலில், திரிஷாவின் திருமணம் குறித்து பிரபல ஜோதிடர் அஸ்ட்ரோ ஜெயஸ்ரீ தெரிவித்திருக்கும் கணிப்பு மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விஜயும் திரிஷாவும் திருமணம் செய்துகொள்வார்களா என்ற கேள்விக்கு அவர் கூறியிருக்கும் பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரிஷாவின் கல்யாண வாழ்க்கை குறித்து பேசிய ஜெயஸ்ரீ, அவருக்கு வழக்கமான முறையில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து, சடங்குகளுடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு அதோடு, விஜய் – திரிஷா இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று தான் கணிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்தக் கருத்துதான் இப்போது இருவரையும் பற்றிய பேச்சுகளுக்கு நடுவே கவனம் பெற்றிருக்கிறது.
ஏற்கனவே விஜய்யின் அரசியல் பற்றி அவர் பேசும்போது, விஜய்யால் தொடர்ந்து அரசியலில் பயணிக்க முடியாது. விட்டு போவார்… பிறகு மீண்டும் வருவார். வயலில் இறங்கி வேலை செய்வது போல மேல் மட்டத்தில் இருப்பவர்களை சுத்தம் செய்து இருக்கிறார். ஆனால் அடிமட்டத்தில் இருப்பவர்களை சுத்தம் செய்தால் மட்டும்தான் அவரால் நிலைத்து அரசியலில் நிற்க முடியும். அவர் அமைச்சர் அளவிற்கு சரியாக தேர்ந்தெடுத்து இருந்தாலும் அடிமட்டத்தில் இருப்பவர்கள் மத்தியிலும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு வெற்றி நிலைத்து கொண்டே இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
ஜெயஸ்ரீ தற்போது பேசப்படுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் தொடர்பாகவும் பல வருஷத்துக்கு முன்பே அவர் கணிப்பு கூறியிருந்தார். இப்போது அனிருத் – காவ்யா மாறன் திருமணம் பற்றிய செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், அவருடைய பழைய கணிப்புகளும் மீண்டும் பேசப்படுகின்றன. அனிருத் திருமணம் பற்றிய பேச்சுகள் ஒருபுறம் இருக்க, விஜய் – திரிஷா குறித்த கணிப்பும் சேர்ந்து சமூக வலைதளங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஜெயஸ்ரீயின் கருத்துகளைத் தேடிப் பார்ப்பவர்களும் அதிகரித்துள்ளனர்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகும், திரிஷாவுடன் அவரை இணைத்து ரசிகர்கள் பல்வேறு விவாதங்களை நடத்தி வருகின்றனர். இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலோ அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவுகின்றன. அதே நேரத்தில், ஒரு சில புகைப்படங்கள் அல்லது சமூக வலைதளப் பதிவுகளை மட்டும் வைத்து இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முடிவுக்கு வர முடியாது. அரசியல், சினிமா என விஜயின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அவருடைய பெயருடன் திரிஷாவின் பெயரும் தொடர்ந்து பேசப்படுவது மட்டும் விவாதத்தை ஏற்படுத்துகிறது.
