விஜய் ரொம்ப ஸ்மார்ட், அழகு, வெட்கப்பட்டா ரொம்ப அழகு:விஜய் சேதுபதி

அஜித் அணி 3வது இடம்: லண்டனுக்கு சென்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அங்கு அஜித் குமார் கலந்து கொண்ட கார் பந்தயத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். அந்த பயத்தில் அஜித் குமார் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாம் விஜய்ணா வந்த ராசி தான் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். லண்டன் விவகாரத்தை விட தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விவகாரம் தான் சமூக வலைதளங்களில் சூடுபிடித்திருக்கிறது.

வெளிநடப்பு: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் ரொம்ப ரொம்ப சுமார், சுவராஸ்யமாகவே இல்லை என்று பலரும் புலம்பி வந்தார்கள். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி சொன்ன ஒரு விஷயத்தால் அந்த நிகழ்ச்சி பரபரப்பாகிவிட்டது. பிக் பாஸுல ஜனநாயகம் பற்றி மறைமுகமாக இல்லையாம் நேரடியாகவே பேசியிருக்கிறாராம் விஜய் சேதுபதி என பலரும் அந்த வீடியோவை தேடிக் கண்டுபிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனநாயக அறையில் ஆளும் அணி வெளியேறியதை பார்த்த விஜய் சேதுபதியோ, சட்டசபையில் பார்த்தது இல்லையா முனியம்மா?. ஆளும் அணி வெளியே போகக் கூடாது. எதிரணி தான் வெளியே போவாங்க என்றார். அதன் பிறகு லீடர் சாதிகாவை விஜய் சேதுபதி விளாசியது தான் விஜய் ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது.

லீடர் கருத்து: தலைவர்னா என்னனு தெரியாம, தலைமை பண்புனா என்னனு தெரியாம, பிரச்சனை வந்தால் எதிரணி மீது பழியை போடுவது, ஓடிவிடுவது எல்லாம் நல்லா இல்லை. அது மோசம் என்றார் விஜய் சேதுபதி. அவர் ஒன்றும் சாதிகாவை இப்படி சொல்லவில்லை, நேரடியாகவே தமிழகத்தில் நடப்பதை தான் பேசியிருக்கிறார். யார் எதிர்கட்சி மீது பழி போடுகிறார்கள், ஓடினார்கள் என்பது தான் ஓட்டு போட்ட மக்களுக்கே தெரியும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

விஜய் ரசிகர்களோ, விஜய் சேதுபதி நல்லவர் கிடையாது. தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துவிட்டார். மாஸ்டர் பட விழாவில் விஜய்ணா மீது பாசம் இருப்பது போன்று நடித்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பற்றி மட்டும் பேச தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். அதை விட்டுவிட்டு அரசியல் பேசக் கூடாது விஜய் சேதுபதி. அப்புறம் நீங்கள் செய்ததை எல்லாம் நாங்கள் எக்ஸ்போஸ் செய்வோம் என்கிறார்கள் அவர்கள்.

விஜய் ஸ்மார்ட்: விஜய் சேதுபதி தன் ரசிகர்களை சந்தித்தால் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்தபோது எனக்கு ஒரு முத்தம் தர மாட்டீங்களா நண்பா என்று விஜய் கேட்க, உங்களுக்கு இல்லாததா என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டார் மக்கள் செல்வன். அந்த முத்த புகைப்படம் அப்பொழுது பெரிய அளவில் வைரலானது.

மாஸ்டர் பட விழாவில் பேசிய விஜய் சேதுபதியோ, நான் உங்களுக்கு முத்தம் கொடுத்தபோதே தெரிந்திருக்கும் உங்க மீது எனக்கு செம லவ் இருக்கிறது என்று சொல்ல அதை கேட்டு விஜய் வெட்கப்பட்டு சிரித்தார். நீங்க ரொம்ப ஸ்மார்ட்டாக, சூப்பராக இருக்கிறீர்கள். ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். வெட்கப்பட்டால் ரொம்ப அழகாக இருப்பார். நீங்களே பாருங்கள் என்று விஜய்யை விஜய் சேதுபதி கையை காட்ட அரங்கமே அதிர்ந்தது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

விஜய் சேதுபதி பேசப் பேச விஜய் வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தார். அதன் பிறகு விஜய் கூறியதாவது, அவர் தன் பெயரில் மட்டும் எனக்கு இடம் கொடுக்கவில்லை, மனதிலும் கொடுத்திருக்கிறார். நன்றி நண்பா என விஜய் சொல்ல கையெடுத்து கும்பிட்டார் விஜய் சேதுபதி. அந்த வீடியோவையும் தற்போது ஷேர் செய்து விஜய் சேதுபதியை கேள்வி கேட்கிறார்கள் தளபதியன்ஸ்.

Source link