விடாமுயற்சி செய்பவர், தன்னை தானே செதுக்கியவர், ஹாட்ஸ் ஆஃப் சூர்யானு பாராட்டிய ரஜினி – happy 51st birthday the one suriya sivakumar

சூர்யா பிறந்தநாள்: சூர்யா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிப்பின் நாயகனுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடித்தோம், சம்பாதித்தோம், குடும்பத்தை பார்த்துக் கொண்டோம் என்று இல்லாமல் ஏழை வீட்டு பிள்ளைளை படிக்க வைத்து வருகிறார் சூர்யா. அகரம் அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் படிப்புக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

சூர்யாவுக்கு தன் அப்பா சிவகுமார் மாதிரி நடிகராக வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்றவரை தேடி பட வாய்ப்பு வரவே சரி முயற்சி செய்யலாம் என்று அதை ஏற்று நடிக்க வந்தவர் இன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்றவராகிவிட்டார்.

பாராட்டிய ரஜினி: நடிப்பு மட்டும் அல்லாமல் டான்ஸிலும் தேறிவிட்டால் சூர்யா. நாளுக்கு நாள் நடிப்பில் தேறிக் கொண்டே போகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூர்யா பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவை தலைவர் ரசிகர்கள் ஷேர் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

ரஜினிகாந்த் கூறியதாவது,தன்னை தானே செதுக்கியவர். பிதாமகன், காக்க காக்க, சிங்கம், அயன் என அவர் நடித்த கதாபாத்திரங்களில் எல்லாம் அவரால் மட்டும் தான் நடிக்க முடியும். கடின உழைப்பாளி. ஹாட்ஸ் ஆஃப் சூர்யா என்றார்.

சூர்யாவிடம் ஒரு ஸ்பெஷலான விஷயம் இருக்கிறது. அவர் தன்னை பற்றி வரும் விமர்சனங்களை பார்த்து பயந்து சினிமாவை விட்டு ஓடிவிடவில்லை. மாறாக அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு தன்னை தானே மாற்றிக் கொண்டார். இன்று சூர்யா நடிப்பை பார்த்து யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறார். நடிக்க வந்த புதிதில் சூர்யாவுக்கு டான்ஸ் ஆடத் தெரியவில்லை என்கிற விமர்சனம் இருந்தது. தற்போது அவரை பார்த்து யாரும் அப்படி சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு அற்புதமாக டான்ஸ் ஆடுகிறார்.

ரிலீஸுக்கு காத்திருக்கும் விஸ்வநாத்: இந்த ஆண்டு சூர்யாவுக்கு நல்ல ஆண்டாக துவங்கியிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் முதல் முறையாக நடித்த கருப்பு படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துவிட்டது. சூர்யாவின் கெரியரில் அதிகம் வசூலித்த மெகா பிளாக்பஸ்டராக அமைந்துவிட்டது கருப்பு. அந்த படம் அமோக வெற்றி பெற்ற நிலையில் சூர்யா நடித்திருக்கும் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் விஸ்வநாத் அன்ட் சன்ஸில் சூர்யாவின் கெட்டப் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. அவரை ஃபேமிலி சப்ஜெக்ட் படத்தில் பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். கருப்பை போன்றே விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன் கருப்பு படம் வெற்றி பெற்றது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிக்கு விலை உயர்ந்த காரை வாங்கி பரிசாக கொடுத்து அதில் அவரை அமர வைத்து சென்னையை சுற்றி வந்தார் சூர்யா. அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை அவர். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், எடிட்டர் கலைவாணன், ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோருக்கும் கார்களை பரிசாக கொடுத்தார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அதில் எடிட்டர் கலைவாணனுக்கு அமரன் படத்திற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தியா, தேவை நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த ரசிகர்களோ தம்பியை ஹீரோவாக்கும் நேரம் வந்துவிட்டது என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படம் தி ஒன் சூர்யா பிறந்தநாளில் ரிலீஸாகி தளபதி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
Source link