திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: தி.மு.க.,வினர் அரசியல் செய்வதற்காக, எது வேண்டுமானாலும் பேசுவார்கள். ‘தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பு இல்லை’ என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
‘விடியல் ஆட்சி’ என்ற பெயரில் அவர் நடத்திய ஆட்சியில், விடியலே இல்லாததால் தான், மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் நிர்வாகம், திருச்சி மாநகராட்சிக்கு 3 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டியுள்ளது. அது குறித்து மாநகராட்சி ஆணையருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இரு தரப்பிலும் பேச்சு நடத்தி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும். மழை காரணமாக, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்தில் ஒரு சில இடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து உள்ளது. அந்த இடத்தை, அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கோபுரத்தை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
