விதவைகளுக்கு இனி ரூ.6,000 நிதியுதவி.. தமிழக அரசின் புதிய அறிவிப்பு- ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை இதோ – tamil nadu government hikes financial assistance for ex-servicemen and widows to rs 6000

விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ. 6000-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில்,முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.குறிப்பாக தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் கணவனை இழந் து வாழும் விதவைகளுக்கான மாதந் தோறும் தமிழக அரசு சார்பில் 4ஆயிரம் வழங்கப்பட்டு வந் த நிலையில், அதனை 6ஆயிரமாக உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம்

ஆதரவற்ற விதவைகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு’ (Destitute Widow Pension Scheme – DWPS) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள்குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

தேவையான முதன்மை ஆவணங்கள்:

விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டுஆதார் ஒப்புதல் படிவம்குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) / முகவரிச் சான்றுகணவரின் இறப்புச் சான்றிதழ் (Death Certificate)விதவைச் சான்றிதழ் (Widow Certificate)சுய பிரகடனப் படிவம் (Self-Declaration Form)வாக்காளர் அடையாள அட்டை (அடையாளச் சான்றாக)வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம் (Bank Passbook)

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறைகள்:

தமிழ்நாடு அரசு இ-சேவை இணையதளத்தில் நுழைந்து, ‘Revenue Department’பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சேவைகள் பட்டியலில் மூன்றாம் பக்கத்தில் உள்ள REV-202 Destitute Widow Pension Scheme (DWPS) என்ற தேர்வைக் கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணை உள்ளிட்டு தேட வேண்டும். கேண் எண் இல்லாதவர்கள் புதிய எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கணவர் உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட கேண் எண்ணாக இருந்தால், ‘Edit CAN Details’ பகுதிக்குச் சென்று, நிலைமையை ‘Widow’ என மாற்றி, கணவரின் பெயரை உள்ளிட்டு புதுப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் பணம் வங்கி மூலமாக வர வேண்டுமா அல்லது அஞ்சலகம் மூலமாக வர வேண்டுமா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். வங்கிக் கணக்கு என்றால் வங்கிப் பெயர், கிளையின் பெயர், கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டைச் சரியாக உள்ளிட வேண்டும். ‘ஆதரவற்றவரா’ என்ற கேள்விக்கு உரிய விவரங்களை அளிக்க வேண்டும். 20 வயதிற்கு மேற்பட்ட ஆதரவு அளிக்கக்கூடிய பெரிய மகனோ அல்லது பேரனோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சொந்த வீடு உள்ளதா, வாடகை வீடா அல்லது குடிசை வீடா என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும். கணவர் இறந்த தேதி, இறப்புச் சான்றிதழ் பதிவு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

கூடுதல் விண்ணப்பக் கட்டுப்பாடுகள் & தகுதிகள்:

கணவர் இறந்த தேதி, இறப்புச் சான்றிதழ் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட தோராயமான தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். விண்ணப்பதாரர் மறுமணம் செய்யாதவராக (No) இருக்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான BPL எண் இருந்தால் குறிப்பிடலாம், இல்லையெனில் அதனைத் தவிர்க்கலாம். விண்ணப்பதாரர் உட்பட குடும்பத்தின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் இத்திட்டத்திற்குத் தகுதி பெற முடியாது. விண்ணப்பதாரரின் தொழில் பிரிவில் ‘Private’ எனக் குறிப்பிட்டு, கூலி வேலை அல்லது லேபர் (Labor) என உள்ளிட வேண்டும். நிலம் அல்லது பிற சொத்து விவரங்களைக் குறிப்பிட்டால் ஓய்வூதியம் ஒப்புதலாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால், சொத்து எதுவும் இல்லை எனத் தெரிவிப்பது சிறந்தது.

ஆவணங்கள் பதிவேற்றம்

புகைப்படத்தின் அளவு 50 KB-க்குள்ளும், மற்ற ஆவணங்களின் அளவுகள் 200 KB-க்குள்ளும் இருக்க வேண்டும். புகைப்படத்தைப் பதிவேற்றிய பின் பதிவிறக்கமாகும் ‘Aadhaar Consent Form’ மற்றும் ‘Self-Declaration Form’ ஆகிய படிவங்களில் கையொப்பமிட்டு ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். அனைத்து ஆவணங்களையும் இணைத்த பிறகு ‘Make Payment’ என்பதைச் சொடுக்கி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பின் ஒப்புதல் சீட்டு (Acknowledgement Receipt) வழங்கப்படும். இத்திட்டம் வெற்றிகரமாக ஒப்புதலான பிறகு, விண்ணப்பதாரருக்குக் மாதம் தோறும் ஓய்வூதியத் தொகையாக ₹1,000 வங்கி கணக்கு அல்லது அஞ்சலகம் மூலம் வழங்கப்படும்.

Source link