வினாத்தாள் கசிவு விவகாரம் : பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இருப்பினும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. வினாத்தாள் கசிவுகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக, விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். 

இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைகிறது.நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்க நினைப்பவர்கள் எவரும் தப்ப முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link