சென்னை,
பாதுகாப்பான குறுவட்டங்களிலுள்ள பாசன வசதியில்லாத தனிநபர் பொதுப்பிரிவு (General Category) விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது.
இதுதொடர்பாக வேளாண்மை பொறியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பின்னேற்பு மானிய விவரங்கள்
பொதுப்பிரிவினைச் சார்ந்த சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம்.
இதர விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 இலட்சம்.
தகுதிகள் என்னென்ன..?
புஞ்சை நிலம் சொந்தமாக வைத்துள்ள அனைத்து பொதுப் பிரிவு (General Category) விவசாயிகள்.
குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் (ஒரே இடத்தில்) இருத்தல் வேண்டும்.
கூட்டுப் பட்டாதாரராக இல்லாதிருத்தல் வேண்டும்.
நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத அல்லது தூர்ந்துபோன கிணறுகள் கொண்ட புஞ்சை நில விவசாயிகள்.
பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன..?
விவசாயியின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம்
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
பட்டா சிட்டா
நடப்பு பசலி ஆண்டு அடங்கல்
நில வரைபடம்
சிறு/குறு விவசாயி சான்று (பெண் விவசாயிகள் தவிர்த்து, 60 சதவீத மானியம் பெற விரும்புகிறவர்கள் மட்டும்)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
