விவசாய நிலத்தில் இரட்டை வருமானம் பயிருடன் 1.40 கோடி மெ.வாட் சூரிய மின் வாய்ப்பு

விவசாய நிலத்தில் பயிர் சாகுபடியை தொடர்ந்தபடியே சூரிய மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் ‘அக்ரிவோல்டாயிக்ஸ்’ முறை, விவசாயிகளுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை உருவாக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பி.ஐ.பி., தெரிவித்துள்ளதாவது:

இந்த முறையில், பயிர்களின் மேல் அல்லது பயிர் வரிசைகளுக்கு இடையில் சூரிய மின் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இதனால் விவசாயத்தை தொடர்ந்தபடியே மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். சில பயிர்களுக்கு சூரிய தகடுகள் அளிக்கும் பகுதி நிழல், மண்ணின் ஈரப்பதம் விரைவாக குறைவதை கட்டுப்படுத்தவும் உதவும்.

உற்பத்தியாகும் மின்சாரத்தை பாசன பம்புகள் உள்ளிட்ட விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். தேவைக்கு அதிகமாக கிடைக்கும் மின்சாரத்தை மின் அமைப்பகளுக்கு வழங்குவதன் வாயிலாக விவசாயிகள் கூடுதல் வருமானமும் பெறலாம்.

பழங்கள், காய்கறிகள், மசாலா பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்கள் இந்த முறைக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன. ஒரே நிலத்தில் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய இரண்டையும் மேற்கொள்ள முடிவதால், நிலத்தின் பயன்பாடு அதிகரிப்பதுடன் வருமான வாய்ப்பும் விரிவடையும்.

இந்த துறையை விரிவுபடுத்த ஆராய்ச்சி, முன்னோடி திட்டங்கள் மற்றும் கொள்கை ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘பி.எம். குசும்’ உள்ளிட்ட திட்டங்களும் விவசாயத்தில் சூரிய மின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இவ்வாறு பி.ஐ.பி., தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரம்

36

செயல்பாட்டில் உள்ள அக்ரிவோல்டாயிக்ஸ் திட்டங்கள்

37.54 மெகாவாட்

மொத்த நிறுவப்பட்ட திறன்

1.40 கோடி மெகாவாட் வரை

அக்ரிவோல்டாயிக்ஸ் மின் உற்பத்தி வாய்ப்பு

Source link