விஷ்ணு விஷால் கெரியரில் முதல் முறையாக…:ரூ. 55 கோடி வசூலித்த கட்டா குஸ்தி 2 – vishnu vishal starrer gatta kusthi 2 collects rs. 55 crore

கட்டா குஸ்தி 2 ரூ. 55 கோடி: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கணவன், மனைவியாக நடித்த கட்டா குஸ்தி 2 படம் ஜூலை 3ம் தேதி ரிலீஸானது. அந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸின் அமோக ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் கட்டா குஸ்தி 2 படம் உலக அளவில் ரூ. 55 கோடி வசூல் செய்திருப்பதாக போஸ்டருடன் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

தன் பட வசூல் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, என் படம் முதல் தடவையாக ரூ. 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த தருணத்தை நான் ஒரு போதும் மறக்கவே மாட்டேன். டிக்கெட் வாங்கி என் படம் பார்த்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அன்பு தான் என் பெரிய பலம். நான் தொடர்ந்து கடினமாக உழைத்து, நல்ல கதைகளை சொல்லி உங்களை மகிழ்விப்பேன் என தெரிவித்துள்ளார்.
நெகட்டிவ் விமர்சனங்கள்: கட்டா குஸ்தி 2 படம் நெகட்டிவிட்டியை தாண்டி வசூல் செய்தது தான் பெரிய விஷயம். இது போதும் எங்களுக்கு என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். அதாவது கட்டா குஸ்தி 2 ரிலீஸுக்கு முன்பே படம் குப்பை, தியேட்டர் மெட்டீரியல் கிடையாது, காசை வீணடிக்க வேண்டாம். விஷ்ணு விஷால் நடிப்பு மோசம் என்று சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்தார்கள். இது என்ன கட்டா குஸ்திக்கு வந்த சோதனை என ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

படமே ரிலீஸாக நிலையில் அது Disaster என்று சொல்வதை ஏற்க முடியாது. மக்களே, அவர்களின் நெகட்டிவ் விமர்சனங்களை யாரும் நம்ப வேண்டாம் என சினிமா ரசிகர்கள் தெரிவித்தார்கள். அதனால் அந்த நெகட்டிவிட்டி விஷ்ணு விஷால் படத்தை பாதிக்கவில்லை.

உடல்நல பாதிப்பு: நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அண்மையில் வருத்தப்பட்டார் விஷ்ணு விஷால். இந்நிலையில் அவரின் கெரியரில் புது உச்சம் தொட்டுவிட்டார். கட்டா குஸ்தி 2 படத்தை விளம்பரம் செய்தபோது சிரித்துப் பேசினாலும் விஷ்ணு விஷால் முகம் சோர்வாகவே இருந்தது. உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா என பலரும் அவரிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.

இதையடுத்து தனக்கு auto immune பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருந்துகளால் பக்க விளைவுகளை சந்தித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார். தன் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும் அதை காரணமாக வைத்து வீட்டில் இருக்காமல் அவர் தொடர்ந்து விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் ரசிகர்களை கவர்ந்தது.
படம் ரிலீஸானதும் விஜய், த்ரிஷா கிருஷ்ணன் பற்றி சமூக வலைதளங்களில் பேச்சாக இருந்தது. அதற்கு காரணம் அப்படிப் போடு பாட்டு. கட்டா குஸ்தி 2ல் விஜய்ணா பட பாட்டுக்கு விஷ்ணு விஷாலும், மோக்ஷாவும் ஆட, அது வைரலோ வைரலானது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

படத்தை விளம்பரம் செய்தபோது விஜய்க்கு எதிராக எதுவும் கிடையாது என ரஜினி சாரே சொல்லும் நிலைமை என விஷ்ணு விஷால் தெரிவித்தார். அந்த வீடியோவை வைரலாகவே விஜய் ரசிர்கள் அவரை திட்டினார்கள். விஜய் சார்னு தான் சொல்லணும் என்றார்கள். நானாக விஜய்னு சொல்லவில்லை ரஜினிகாந்த் சார் சொன்னதை அப்படியே சொன்னேன் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையே கட்டா குஸ்தி 2க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து விஷ்ணு விஷாலை பாராட்டியிருந்தார் ஆமீர் கான்.
Source link