விஸ்வநாத் அன்ட் சன்ஸ் கதை : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு ஜோடியாக நடித்திருக்கும் விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சூர்யா வயதில் பாதி இருக்கும் மமிதா பைஜுவை போய் ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்களே என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள். வெங்கி ஒன்றும் காரணம் இல்லாமல் மமிதாவை ஹீரோயினாக்கவில்லை.
கதைப்படி 40 வயது நபர் மீது 20 வயது பெண்ணுக்கு காதல் ஏற்படுகிறது. அதனால் தான் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜுவை நடிக்க வைத்திருக்கிறார் வெங்கி அட்லூரி. அவர் சூர்யாவை வைத்து எடுக்க நினைத்த கதை இது கிடையாது. ஒரு பயோபிக்கில் தான் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என நினைத்து அவரிடம் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை சூர்யாவுக்கு பிடித்திருந்தபோதிலும் ரைட்ஸ் பிரச்சனை ஏற்பட்டதால் படமாக்க முடியாமல் போய்விட்டது.
வெங்கியின் கதை: நான் இரண்டு பயோபிக்கில் நடித்துவிட்டேன். அழகான காதல் கதை கொண்ட படத்தில் நடித்து சுமார் 14 ஆண்கள் ஆகிவிட்டது. அதனால் ஜாலியாக லைட்டாக ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார் சூர்யா. இருக்கு சார், ஒரு 40 வயது நபர், 20 வயது பெண் பற்றிய கதை அது என்று மட்டும் போனில் சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார் வெங்கி.
இதையடுத்து வெங்கி அட்லூரியை சென்னைக்கு வரவைத்து கதை கேட்டிருக்கிறார் 2டி என்டர்டெயின்மென்ட்ஸின் ராஜசேகர் பாண்டியன். 10, 15 சீன் கேட்டதுமே அவருக்கு கண் கலங்கிவிட்டதாம். உடனே சூர்யாவை தொடர்பு கொண்டு இது நல்ல கதையாக இருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் சார் என்று கூறியிருக்கிறார் ராஜசேகர் பாண்டியன்.கதை கேட்ட சூர்யாவுக்கும் அது பிடித்துப் போகவே, இந்த படத்தை நாம் கண்டிப்பாக பண்ணுகிறோம் வெங்கி என்று கூறியிருக்கிறார்.
ஏப்ரலில் கதை கேட்டுவிட்டு ஜூன் மாதம் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். வெங்கி அட்லூரியின் கதை சூர்யாவுக்கு அந்த அளவுக்கு பிடித்துவிட்டது. தன் கதை சூர்யாவுக்கு பிடிக்குமா, பிடிக்காதோ என்று வெங்கி தயங்கிய நிலையில் எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கிறது.
சஞ்சய் விஸ்வநாத் எனும் பணக்காரராக நடித்திருக்கும் சூர்யாவுக்கு படத்தில் எமோஷனல் பிரச்சனை உள்ளதாம். அந்த படத்திற்கு தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தன் இசையில் சூர்யாவை பாடவும் வைத்திருக்கிறார். அந்த பாடல் வீடியோ வெளியாகி சூர்யா ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
பிளாக்பஸ்டர் நம்பிக்கை: விஸ்வநாத் அன்ட் சன்ஸ் கண்டிப்பாக பிளாக்பஸ்டராகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கருப்பு படத்தை போன்றே விஸ்வநாத் அன்ட் சன்ஸையும் குடும்பங்கள் கொண்டாடி மெகா பிளாக்பஸ்டராக்கும் என்று நம்பப்படுகிறது.
விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவின் லுக் அனைவருக்கும் பிடித்துவிட்டது. கையில் குழந்தையுடன் ஃபேமிலி மேனாக சூர்யாவை இப்படி ஜாலியாக திரையில் பார்த்து பல காலமாகிவிட்டது. லவ் ஸ்டோரியில் அவ்வப்போது நடிக்கவும் அண்ணா என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கடந்த 23ம் தேதி சூர்யாவின் 51வது பிறந்தநாள். ஆனால் டெல்லியில் கல்விக்காக மாணவர்கள் போராடியபோது என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறிவிட்டார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
