இதனையடுத்து புவனேஸ்வர் கேபிடல் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 10ஆம் பதிவு செய்யப்பட்ட வழக்கு கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு இந்த வழக்கின் பின்னணி மற்றும் உண்மைகள் குறித்து வி.கே. பாண்டியனுக்குத் தெரிந்திருக்கலாம் என்பதால், அவரிடம் விசாரணை நடத்தக் காவல் துறை முடிவு செய்திருந்தது. இந்நிலையில் புவனேஸ்வர் – கட்டாக் காவல் ஆணையரகம் சார்பில் ஒடிசாவின் முன்னாள் 5டி தலைவரும், பிஜு ஜனதா தள முன்னாள் தலைவருமான வி.கே.பாண்டியனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில், வரும் 25ஆம் தேதி (25.07.2026) அன்று காலை 11:00 மணிக்கு புவனேஸ்வர் மண்டலம் 1இல் உள்ள உதவிப் போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள், பதிவுகள், மின்னணு சாதனங்கள் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய ஆதாரங்கள் தங்களிடம் இருந்தால், அவற்றை நேரில் வரும்போது எடுத்து வருமாறும் அந்த நோட்டீஸில் கேபிடல் காவல் நிலையத்தின் கூடுதல் பொறுப்பு ஆய்வாளர் பெபன் பெஹாரி ஹோதா ( குறிப்பிட்டுள்ளார்.
