வீடியோவுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடில்லி: ”நான் பதிவிட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது; ஆலோசனைகளை வழங்கிய இளம் நண்பர்களுக்கு நன்றி ” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், ”வினாத்தாள் கசிவை தடுக்க கடும் விதி களுடன் கூடிய புதிய மசோதா பார்லி.,யில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்,” என, பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவானது, 27.1 கோடி பார்வைகளையும், 1.5 கோடி பேர் விருப்பங்களையும், 1.3 கோடி பேர் கருத்துகளையும் பெற்றது. வீடியோ வெளியிட்டதன் எதிரொலியாக அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரே நாளில் 10 லட்சம் பேர் புதியதாக பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் மற்றொரு வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இளம் நண்பர்கள் மற்றும் மக்களின் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர் வீடியோவில் கூறியதாவது: ‘நன்றி, நண்பர்களே! நேற்று இரவு உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பதிவிட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது.

தங்களின் ஆலோசனைகளை வழங்கிய இளம்நண்பர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. நாம் தொடர்ந்து இணைந்திருப்போம். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link