சென்னை: மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இணைய தளத்தை, தமிழ், ஆங்கிலம் உட்பட, 22 மொழிகளில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படுகின்றன. இவற்றை பார்க்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
‘பாஷினி’ இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளின் இணையதளங்கள், ஹிந்தியை முதன்மையாக பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டன. அதில், விருப்ப மொழி என்ற அடிப்படையில், ஆங்கிலத்தை தேர்வு செய்யும் வசதி உள்ளது.
இப்படி மத்திய அரசின் இணையதளம், ஹிந்தியில் முதன்மையாக இருப்பதற்கு, பல்வேறு தரப்பிலும் ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டன.
அதேபோல, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையதளமும், ஹிந்தியை முதன்மையாக பயன்படுத்தும் வகையில் இருந்தது. தேவைப்படுவோர் ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம்.
தற்போது அந்த இணையதளத்தை, ஆங்கிலம், ஹிந்தி மட்டுமல்லாது, தமிழ் உட்பட, 22 மொழிகளில், பொதுமக்கள் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பிராந்திய மொழிகள் என்பதையும் கடந்து, சமஸ்கிருதம், உருது மற்றும் நேபாளி மொழிகளிலும், இந்த இணையதளத்தை மக்கள் பார்வையிடலாம்.
தேசிய மொழி பெயர்ப்பு இயக்ககத் தின், ‘பாஷினி’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப் படை யில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையை தொடர்ந்து, மத்திய அரசின் பல்வேறு துறை இணையதளங்களையும், மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பார்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்கள் தாய் மொழியிலேயே, மத்திய அரசின் இணையதளங்களை பார்வையிடலாம்.
