சென்னை: ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மொபைல் செயலியை, அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பில் இதுவரை, 19.37 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
ஜூலை மாதம் முழுதும், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வீ தி லீடர்ஸ் சார்பில் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் முழுதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந் நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க, அமைப்பின் பெயரிலேயே, மொபைல் செயலி ஒன்றை அண்ணாமலை அறிமுகம் செய்தார்.
இந்த செயலியை, ‘பிளே ஸ்டோர்’ மற்றும் ‘ஆப் ஸ்டோர்’ வழியே மொபைலில் பதிவிறக்கம் செய்யலாம். செயலியில், புதிய உறுப்பினர்கள் சேரலாம். பழைய உறுப்பினர்களும், தங்கள் அடையாள எண்ணை குறிப்பிட்டு, பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
