வெற்றிப்பயணத்தால் பாதிப்பு – கிராமப்புற கடைகளில் வியாபாரம் பாதிப்பு என புலம்பல் – vetri payanam scheme makes big revenue loss to village shopkeepers says report

கடந்த திமுக ஆட்சியில், ‘விடியல் பயணம்’ என்ற பெயரில், சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், 7,500 சாதாரண கட்டண நகர பேருந்துகள், மலை பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளில் தினமும் சராசரியாக, 59 லட்சம் பேர் பயணித்தனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை, ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்தது.

குறையும் கிராமப்புற வணிகம்

வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில், ‘ஏசி’ பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம். இதேபோல், மாவட்டங்களில் சாதாரண, LSS, மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். ஏசி தவிற மற்ற அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்பதால்,

பலரும் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை, ஜவுளி போன்றவற்றை வாங்க உள்ளூரில் உள்ள கடைகளை விட்டு மொத்த விலை கடைகளை தேடி, நகரங்களுக்கு செல்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், நகரங்களில் வியாபாரம் இரு மடங்கு அதிகரித்து வருவது, அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராமப்புற பலசரக்கு கடை வியாபாரிகள் புலம்பலம்

150 கிலோ மீட்டர் தூரம் வரை அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற வெற்றிப் பயணத் திட்டத்தால், 12,000 ஊராட்சிகளில் கிராமப்புற வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெற்றிப் பயணத்தை பயன்படுத்தி நகரங்களில் உள்ள மொத்த விற்பனை கடைகளை முற்றுகையிடும் பெண்கள் ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களை வாங்கி வந்து வீட்டில் சேமித்து வைத்துக்கொள்வதாக கூறுகின்றனர்.

பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பயணித்து காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி வந்தும், கிராமத்தில் உள்ள பெண்கள் அவற்றை வாங்காததால் சில பொருட்கள் வீணாகி நஷ்டம் ஏற்பட்டு விடுவதாக ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி முருகேசன் வேதனை தெரிவித்துள்ளார்.

நகரங்களில் ஜவுளி வாங்க குவியும் பெண்களால் விற்பனை ஜோர்

சென்னை, கும்பகோணம், திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, நெல்லை மாநகரங்களை நோக்கி படையெடுக்கும் பெண்கள் அங்குள்ள ஜவுளிக்கடைகளிலேயே பண்டிகை கால ஜவுளிகளை வாங்குவதால் கிராமங்களிலும் சிறு நகரங்களில் உள்ள ஜவுளிக் கடைகள் காத்துவாங்குவதாக மானாமதுரையைச் சேர்ந்த ஜவுளிக்கடை வியாபாரி முத்துசேதுபதி கூறியுள்ளார்.

இதேநிலை தொடர்ந்தால் தங்களால் வியாபாரத்தை தொடர முடியாது என்றும் வேறு ஏதாவது பிழைப்பைப் தேடிச் செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறுகையில் வெற்றி பயணத்தின் கீழ் பெண்கள் பெரும்பாலான பேருந்துகளில் ஏறலாம், இறங்கலாம். இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் குறித்து அதிகாரிகள் வாயிலாக அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Source link