அடுத்து வரும் நாட்களில் வங்கி தொடர்பான முக்கியமான பணிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த அக்டோபர் மாதத்தின் இறுதி நாட்களில் வங்கிகளுக்குத் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 24ஆம் தேதியன்றும், ஞாயிற்றுக்கிழமையான அக்டோபர் 25ஆம் தேதியன்றும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மேலும், சில சிறப்புப் பண்டிகைகள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஏழு மாநிலங்களில் அக்டோபர் 26ஆம் தேதியன்றும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உங்களது முக்கியமான வங்கிப் பணிகள் எவ்விதத் தாமதமும் இல்லாமல் முடிய, வங்கிக்குச் செல்வதற்கு முன் விடுமுறை விவரங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறை நாட்காட்டியின்படி, அக்டோபர் 24ஆம் தேதியன்று மாதத்தின் நான்காவது சனிக்கிழமையாகும். பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை வருகிறது. இருப்பினும், ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போலச் செயல்படும்.
அக்டோபர் 26 அன்று 7 மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். லட்சுமி பூஜை, அக்சஷன் தினம் மற்றும் மகரிஷி வால்மீகி ஜெயந்தி போன்ற பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாக அக்டோபர் 26 அன்று சில மாநிலங்களில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம். அதன்படி, ஸ்ரீநகர், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு, பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் பகுதிகளிலும் வங்கிகள் செயல்படாது. அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை அன்று சிக்கிமில் துர்கா பூஜையை முன்னிட்டு விடுமுறையாகும். அக்டோபர் 24 சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினமாகும்.
அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் வாராந்திர விடுமுறையாகும். அக்டோபர் 26 திங்கட்கிழமை அன்று திரிபுரா, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஸ்ரீநகரில் லட்சுமி பூஜை / அக்சஷன் தினம் / மகரிஷி வால்மீகி ஜெயந்தி காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 29 வியாழக்கிழமை அன்று இமாச்சலப் பிரதேசத்தில் கார்வா சௌத் பண்டிகைக்காகவும், அக்டோபர் 31 சனிக்கிழமை அன்று குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்திக்காகவும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறைகள் மூலம் பல முக்கியமான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும். மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ மற்றும் ஏடிஎம் சேவைகள் வழக்கம்போலச் செயல்படும் என்பதால் இதன் மூலம் பணம் அனுப்புதல், இருப்புத் தொகையைச் சரிபார்த்தல் மற்றும் பணம் எடுத்தல் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். இருப்பினும், காசோலைகளைத் தீர்வு செய்தல், வங்கிக் கிளைகளில் நேரடியாகப் பணம் செலுத்துதல், வரைவோலைகளை வழங்குதல் மற்றும் பிற கிளை சார்ந்த சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நீங்கள் வங்கிக்குச் செல்வதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னவென்றால், உங்களுக்கு வங்கி தொடர்பான அவசரப் பணிகள் ஏதேனும் இருந்தால் விடுமுறை நாட்களுக்கு முன்பாகவே அவற்றை விரைந்து முடித்துக் கொள்வது நல்லது. மேலும், உங்களது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ அல்லது ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலையோ பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது கடைசி நேர அலைச்சலைத் தவிர்க்க உதவும்.
