த.வெ.க தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக செல்லலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, தமிழக முதலமைச்சராக பதவியேற்ற விஜய், அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் தங்களுக்கு வருமானம் இல்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்து நிறுவனர்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அனைத்து பேருந்துகளும் இலவசம் என்பதால் பேருந்துகள் சரியாக வரவில்லை என்றும் பல மணிநேரம் பேருந்து நிலையங்களில் காவல் இருக்க வேண்டியுள்ளது என்றும் பெண்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதாக மாற்று திறனாளிகள் குற்றம்சாட்டிய நிலையில் திண்டுக்கல் உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் த.வெ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு நலத் திட்டங்களில் 21 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
