'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு

– சிறப்பு நிருபர் –

பா.ஜ., செய்தித் தொடர்பாளரும், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதான்ஷு திரிவேதி டில்லியில் கூறியதாவது:

நம் நாடு முன்னேறுவதை இந்த தீயசக்திகள் விரும்பவில்லை. ராவணனின் ஒரு தலையை வெட்டினால் மற்றொன்று முளைப்பது போல, இங்கு ஒரு கோரிக்கை நிறைவேறியதும், மற்றொரு கோரிக்கை உருவெடுக்கிறது. இந்த அனைத்து போராட்டங்களுக்கும் பின்னால், ஒரு மையப்புள்ளி இருக்கிறது. வெளிநாட்டு தீயசக்திகளுடன் இணைந்து மத்திய அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. இவற்றை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

‘வியட்நாமில் இருந்து ராகுல் திரும்பியதும், ஆட்சி மாறும்’ என்கிறார் சஞ்சய் ராவத். அவரிடம் அப்படி என்ன தகவல் உள்ளது? காங்கிரசின் சொந்த தலைவர்களுக்கு கூட தெரியாத என்ன செய்தி, அவருக்கு எப்படி தெரியும்? சஞ்சய் ராவத்தின் இந்த பேச்சுக்கு பின்னால், வெளிநாட்டு தீயசக்திகள் இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Source link