வெளுத்து வாங்கும் கனமழை: கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு; சூழல் சுற்றுலா தற்காலிக மூடல்

கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றால சூழல் சுற்றுலா  இன்று (அக்.24) தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரான பாதையில் நீடித்த திருப்பங்கள்: ஜப்பான் உடன் என்ன பிரச்னை? இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம் தாமதமாவது ஏன்?

அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம்  மூடப்பட்டிருக்கும் எனத் வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் .

Source link