வெளுத்து வாங்கும் பருவமழை- முதல்வர் விஜய் அவரச ஆலோசனை

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் உருவாகியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை எழிலகம் அலுவலகத்தில் உள்ள  மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில்  நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில்  தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டார்.

இந்த ஆலோசனையில் நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட அதீத கனமழைக்கு வாய்ப்புள்ள 17 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மழை பாதிப்புகளை முன்னெச்சரிக்கையாக தடுக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற உத்தரவினை முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடைபெற்ற இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.