சென்னை: தலைமைச் செயலகத்தில், வேளாண்மை, உழவர் நலத் துறைக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு முதல்வர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பினால் அண்மையில் வழங்கப்பட்ட விருதுகளை முதல்வரிடம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
