வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (25.03.2026)

காபி கொட்டை

கடந்த வாரம் : ரூ.600.00

தற்போது ரூ. 600.00

காபி கொட்டையின் விலை லண்டனில் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் செலவினங்களை சேர்த்து நம் நாட்டில் விலை நிர்ணயமாகிறது. அறுவைடை சீசன் முடிந்து விட்டதால் இந்த விலையே தொடரக்கூடும்.

சந்தை பட்டிவீரன்பட்டி , திண்டுக்கல்

சாமை

கடந்த வாரம் ரூ. 50.00

தற்போது ரூ.50.00

சாமை வரத்து தற்போது இல்லை. கடந்த டிச., மாதத்தோடு முடிந்து விட்டது ஆனால் போதிய இருப்பு உள்ளது. பிஸ்கட் மற்றும் உணவுக்கான தேவை இருப்பதால் இந்த விலை தொடரும்.

சந்தை தர்மபுரி

ஆமணக்கு

கடந்த வாரம் ரூ.67.00

தற்போது ரூ.67.00

வரத்து பெருமளவு குறைந்து விட்டது. குறைவான அளவிலேயே வருவதால் இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை திருமங்கலம், மதுரை

Source link