ஷெஃப் தாமுவின் சொந்த மகள் இல்லை நான், ப்ளீஸ் நீங்களா யூகிக்காதீங்க: ரேணுகா – renuka gives clarity about chef damu daughter information

நான் மறைந்த ஷெஃப் தாமுவின் மகள் இல்லை என டிஜிட்டல் கிரியேட்டரான ரேணுகா விளக்கம் கொடுத்திருக்கிறார். ஒரு புகைபடத்தால் எழுந்த குழப்பத்தை அவர் தீர்த்து வைத்திருக்கிறார்.

ஷெஃப் தாமு என்னை பாசமாக மகளே என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டு நான் அவர் பெற்ற மகள் என பேசுகிறார்கள். நான் அவர் மகள் இல்லை என ரேணுகா என்பவர் தெரிவித்திருக்கிறார்.

தாமு வாரிசு

​கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞரான தாமு உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் தாமுவின் மகள் ரேணுகா என ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அதை பார்த்த ரேணுகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு விளக்கம் அளித்திருக்கிறார். அவர் தன் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது, ஷெஃப் தாமு என் சொந்த தந்தை கிடையாது. ஆனால் அவர் என் வாழ்க்கையில் தந்தை ஸ்தானத்தில் இருந்தார் என்றார்.

ரேணுகா விளக்கம்

ரேணுகா மேலும் கூறியதாவது, அக்ஷயாவும், நானும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு என் மகள்கள் என்று அவர் அன்போடு குறிப்பிட்டிருந்தார். அது அன்பின் வெளிப்பாடு ஆகும். அதை தவறுதலாக புரிந்து கொண்டு, தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஏற்பட்ட இந்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டியது முக்கியம் என உணர்கிறேன். இது போன்ற நேரத்தில் கணிப்புகள் செய்வதை தவிர்க்கவும். உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் தாமு அங்கிள். உங்களை எப்பொழுதும் மிஸ் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

ஷெஃப் தாமு பாசம்

தாமு இறந்த பிறகு அவரின் குடும்பத்தார் இவர்கள் தான் என ஒரு போஸ்ட் வெளியானது. அதில் ரேணுகாவை தாமுவின் மகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தாமு சார் மகள் ரேணுகாவா என ரசிகர்கள் கேட்ட நிலையில் நான் அவரின் சொந்த மகள் இல்லை என தெரிவித்திருக்கிறார். எல்லோரிடமும் பாசமாக இருந்த ஷெஃப் தாமுவை அனைவரும் அப்பா அப்பா என அழைத்து வந்தார்கள். தன்னை விட வயதில் பெரியவர்கள் கூட அப்பா என அழைப்பதாக முன்பு பேட்டியில் தெரிவித்தார் தாமு. மேலும் அவர் தனக்கு நெருக்கமானவர்கள் மகள் என்று அழைத்தார். இது இப்படியொரு குழப்பத்தில் முடிந்துவிட்டது.

அக்ஷயா தாமு

தாமுவின் மகள் அக்ஷயா ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அப்பா இறந்த பிறகு முதல் முறையாக அவர் போட்ட போஸ்ட்டில் கூறப்பட்டிருப்பதாவது, நீங்கள் தான் எனக்கு எல்லாமே அப்பா. நீங்கள் இந்த உலகில் இல்லாவிட்டாலும் மேலே இருந்து என்னை எப்பொழுதும் பார்ப்பீர்கள், வழிநடத்துவீர்கள் என நம்புகிறேன். உங்களின் அன்பு, ஆதரவுக்கு நானும் கோடிக்கணக்கான மக்களும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். நீங்கள் ஒரு லெஜண்ட். உங்களின் லெகசிக்கு முடிவே கிடையாது. நீங்கள் என்னுடனும், உங்களை விரும்பும் அனைவருடனும் இருக்கிறீர்கள் என நம்புகிறேன். எங்களை வழிநடத்துங்கள். லவ் யூ என தெரிவித்துள்ளார்.

தாமு செல்ல மகள்
புகழ் அழுகை

அக்ஷயா தாமுவின் போஸ்ட்டை பார்த்த குக் வித் கோமாளி புகழோ, இனி அக்ஷயா குட்டிமானு யார் கூப்பிடுவா என தெரிவித்துள்ளார். தாமுவை தன் சொந்த அப்பாவாக நினைத்து வந்தார் புகழ். இந்நிலையில் தாமு இறந்தபோது நியூசிலாந்தில் இருந்தார். அதனால் தன்னால் உடனே கிளம்பி வர முடியவில்லை என்று சொல்லி அழுதபடியே பேசி இன்ஸ்டாகிராமில் இரங்கல் வீடியோ வெளியிட்டார். அதை பார்த்தவர்களோ, ஷெஃப் தாமு இறந்ததை அறிந்து மனதார அழுபவரால் எப்படி இப்படி செல்போனில் கேமராவுக்கு முன்பு அழ முடியும் என புகழை விமர்சித்திருக்கிறார்கள். இதற்கிடையே தாமுவுக்காக வீடியோ வெளியிட்டதுடன் நேரில் அஞ்சலி செலுத்திய ஷெஃப் வெங்கடேஷ் பட் கவனம் ஈர்த்திருக்கிறார்.​

ரஜினி கடந்து வந்த பாதை

Source link