CSK – டிரேடிங்கில் எல்லிஸ் வேணாம்: அன்ஷுல் கம்போஜ்தான் வேணும்: சிஸ்கேவிடம் கேட்ட ஐபிஎல் அணி – chennai super kings chance to trade anshul kamboj in ipl 2027 trading

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், ஹர்திக் பாண்டியாவை வாங்க பல அணிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது புதிதாக பஞ்சாப் கிங்ஸ் அணியும் இணைந்துள்ளது. இப்படி, ஹர்திக் பாண்டியாவுக்காக பல அணிகள் தீவிரமாக டிரேடிங் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தற்போது சிஎஸ்கேவும், மீண்டும் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளது.

அப்போது, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, நேதன் எல்லிஸை விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன் வந்த நிலையில், அதனை மும்பை இந்தியன்ஸ் ஏற்கவில்லையாம். நேதன் எல்லிஸுக்கு பதில், இந்திய பௌலர் அன்ஷுல் கம்போஜ் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். மேலும், டிரேன்ட் போல்ட்டை விடுவிக்க முடிவு செய்திருப்பதால், கூடுதலாக இடது கை பௌலர் கலீல் அகமதுவையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி, இரண்டு வீரர்களை விடுவித்து, 5 கோடி பணமும் பெற மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்புகிறது. ஆனால், இதற்கு சிஎஸ்கே ஒப்புக்கொள்வது சற்று கடினம்தான். காரணம், அன்ஷுல் கம்போஜ் மற்றும் கலீல் அகமது ஆகிய இரண்டு பௌலர்களும் இடது கை பௌலர்கள். இந்த இருவரையும் விட்டுக்கொடுத்துவிட்டால், சிஎஸ்கேவுக்கு பந்துவீச்சில் பெரிய பிரச்சினை ஏற்படும்.

இதனால், அன்ஷுல் கம்போஜ் அல்லது கலீல் அகமது இருவரில் ஒருவரை மட்டும் விடுவித்துவிட்டு, 10 கோடி தொகையையும் கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றா ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே ஆகியோரை கேட்டு ஒற்றை காலில் நின்றது. ஆனால், தற்போது துபேவை வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அணியில், வேகப்பந்து வீச்சு துறை பலவீனமாக இருப்பதால், பும்ராவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் கலீல் அகமது ஆகியோரை வாங்க முடிவு செய்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா விருப்பம்: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளுடன் டிரேடிங் பேச்சு வார்த்தையை நடத்தியது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு சிஎஸ்கே செல்லதான் விருப்பமாக இருக்கிறது. இதனால்தான், அவரை சிஎஸ்கேவுக்கு அனுப்ப, பிடிவாத்ததை தளர்த்தி, ஆயுஷ் மாத்ரே, துபே ஆகியோருக்கு பதில், இடது கை பௌலர்களை டார்கெட் செய்துள்ளனர்.

ஆனால், சிஎஸ்கே இரண்டில் ஒரு பௌலரைதான் கொடுக்க முடியும் என ஒற்றை காலில் நிற்கிறது. இந்த டிரேடில் டீல் விரைவில் இறுதி பெற்றுவிடும் எனக் கருதப்படுகிறது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், மற்றொரு டிரேடிங் டீலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குஜராத் டைடன்ஸ் அணியிடம் இருந்து சாய் கிஷோர் அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், சாய் கிஷோரை வாங்கவே அதக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

சாய் கிஷோருக்கு, ஐபிஎலில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை இருக்கிறது. அவர், சிஎஸ்கேவுக்கு வந்துவிட்டால், பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சரியான வாய்ப்பு கிடைக்கும். மேலும், கிஷோரும் தனது திறமையை நிரூபிக்க, அபாரமாக செயல்படவும் வாய்ப்புள்ளது.

Source link